ஈழத்து காந்தி எனப் போற்றப்படும் தந்தை செல்வாவின் 37 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது.
தந்தை செல்வாவின் சிலைக்கு மலை மாலை அணிவிக்கப்கட்டு மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து நினைவுப் பேருரை இடம்பெற்றது.
நிகழ்வின் நினைவுப் பேருரையை ஓய்வு நிலை நீதிபதி திருநாவுக்கரசு நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் தழிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் தந்தை செல்வாவின் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.