தகவல் தந்தால் ஒரு மில்லியன் சன்மானம்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினை மீண்டும் உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோபி, தெனியன் மற்றும் அப்பன் ஆகிய மூவர் தொடர்பில் தகவல் தருமாறு கோரி யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Capture422014

இவர்கள் தொடர்பில் தகவல் தருபவர்களுக்கு ரூபா 1 மில்லியன் சன்மானம் வழங்கப்படுமென அந்தச் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் உரிமை கோரப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள், யாழ் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் நகர பகுதிகள் மற்றும் குருநகர் பிரதேசத்திலும் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts