Ad Widget

டெனிஸ்வரனுக்குப் பதில் விந்தன்: ரெலோ தீர்மானம்!

வட.மாகாண சபையின் புதிய போக்குவரத்து அமைச்சராக விந்தன் கனகரத்தினத்தை நியமிப்பதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) பரிந்துரை செய்துள்ளது.

வவுனியாவில் நேற்று முன்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்டக் குழுக்கூட்டத்தில் டெனிஸ்வரன் கட்சியிலிருந்து விலக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே தமிழீழ விடுதலை இயக்கம் டெனிஸ்வரனுக்குப் பதிலாக விந்தன் கனகரத்தினத்தை நியமிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

எனினும் தான் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் ஒரு சில விடையங்களை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய அடிப்படையில் சில சட்ட நகர்வுகளை மேற்கொள்வேன் என டெனிஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts