Ad Widget

டுவிட்டரில் ஜனாதிபதியின் பதில்கள்

இன்றையதினம் ஜனாதிபதி அவர்கள் சமூகவலைத்தளமான டுவிட்டரில் மக்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்லளித்து வருகின்றார் அவ்வாறு அவர் பதில் அளித்த சில கேள்விகளும் பதில்களும்.

mahintha-computer-twitter

கேள்வி – எமது அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தினை தயாரிக்கின்றபோது இளைஞர், யுவதிகளின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றதா?

பதில் – மது அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தினை தயாரிக்கின்றபோது இளைஞர், யுவதிகளின் கருத்துக்கு முதலிடம் வழங்கிவருகின்றோம். எமது அரசாங்கத்தில்தான் ஏராளமான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய உயர்மட்ட நடவடிக்கைகளிலும் இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு நல்ல உதாரணம் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அதுமட்டுமல்லாமல், ஏராளமான பெண்கள் அமைப்புகள் எமக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். அதனையும் நாங்கள் கவனத்திற்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறோம் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் தொகையாக ரூபா 2500 கடந்த 2006ஆம் ஆண்டுதொடக்கம் வழங்கப்பட்டுவருகிறது. இதனை அதிகரிக்க முடியாதா?

பதில் – பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற மஹாபொல புலமைப்பரிசில் பணத்தொகையினை அதிகரிப்பது தொடர்பில் அதிகூடிய கவனம் எடுத்துவருவருகின்றோம்.

கேள்வி – யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் குறிப்பான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உங்களது அரசாங்கத்தின் கொள்கைகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன?

பதில் – நாட்டில் நிலவிய பயங்கரவாதம், வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகளின் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டது. நாம் அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம்.கடந்த 2013ஆம் ஆண்டில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் வடக்கிலிருந்து சிறந்த பெறுபேறுகள் கிடைத்தன. இதுவே, நாம் அவர்களுக்காக முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்த சிறந்த பெறுபேறாகும்’ என்றார்.அத்துடன், ‘வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்காக தகவல் தொழில்நுட்ப கூடம் உள்ளிட்ட தெற்குப் பாடசாலைகளில் காணப்படும் சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம் (பேஸ்புக்) மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யும் நோக்கம் உள்ளதா?

பதில் – ‘பேஸ்புக் தளத்தில் எனக்கு 300 ஆயிரம் விருப்பங்கள் உள்ளன. டுவிட்டரில் 25 ஆயிரம் பின்தொடர்பவர்களைத் தாண்டியுள்ளேன். இவ்வாறானதொரு நிலையில், நான் எப்படி இந்த சமூக வலைத்தளங்களை தடை செய்வேன்’ என்றார்.அத்துடன், ‘இந்த சமூக வலைத்தளங்களை நான் தடை செய்தால் வீட்டில் எனது மகன்களிடமிருந்தே நான் ஒரு புரட்சியை எதிர்நோக்க நேரிடும்’ என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கேள்வி – சட்டக் கல்லூரியின் இறுதி பரீட்சைக்குக்கு முப்பது வயதுக்கு மேற்பட்டோர் தோற்றுவதை தடை செய்வதற்கு சட்டக் கல்வி சபை பரிசீலித்துவருகின்றதா?

பதில் – சட்டக்கல்லூரி விவகாரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

கேள்வி – இலங்கையில் மத முரண்டுகள் பற்றி அதிகமாகின்றனவா?

பதில் – மத விவகாரங்களை அடிப்படையாகக் கொண்ட முரண்பாடுகள் இலங்கையில் இடம்பெறவில்லை. சிறு சிறு சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன

Related Posts