Ad Widget

டில்ஷானின் இறுதிப் போட்டியால் எவ்வளவு இலாபம் கிட்டியது தெரியுமா?

தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 28ம் திகதி இடம்பெற்ற போட்டியால், பெருமளவு இலாபம் கிட்டியுள்ளது.

இதன்படி, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த 3வது ஒருநாள் போட்டியில், நுழைவுச் சீட்டுக்கள் (டிக்கெட்டுக்கள்) விற்பனையால் 4.6 மில்லியன் இலாபம் கிடைத்துள்ளதாக, அந்த மைதானத்தின் பொறுப்பதிகாரி மற்றும் முகாமையாளர் சுஜீவ கொடலியத்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த போட்டியைப் பார்வையிட சுமார் 50,000 பேர் வருகை தந்த போதும், 20,000 பேருக்கு மாத்திரம் பார்வையிடும் வாய்ப்புக்கள் விளையாட்டரங்கில் செய்யப்பட்டிருந்தாக அவர் கூறியுள்ளார்.

ஓய்வை அறிவித்துள்ள, இலங்கை அணி வீரர் திலஹரத்ன டில்ஷானின் இறுதி சர்வதேச ஒருநாள் போட்டி அதுவென்பது (3வது ஒருநாள் போட்டி) குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று இடம்பெறவுள்ள 4வது ஒருநாள் போட்டிக்கான 90 சதவீத நுழைவுச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் சுஜீவ கொடலியத்த கூறியுள்ளார்.

இவ்வாறு இம்முறை இடம்பெறும் கிரிக்கெட் போட்டிகளால் பாரிய இலாபம் கிட்டியுள்ளமை, இணையத்தின் ஊடான நுழைவுச் சீட்டு விற்பனையாலேயே எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னிணைப்பு

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts