Ad Widget

டக்ளஸ், ஹத்துருசிங்க ஆகியோரால் முகாம்களில் வாழ முடியுமா?: வலி.வடக்கு மக்கள்

thellipplai_poraddam_02வலி வடக்கில் இருந்து நாங்கள் இடம்பெயர்ந்து 23 வருடங்காக பல்வேறு நெருக்கடிகளில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றறோம் இந்த முகாம்களில் கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா மற்றும் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரால் வாழ முடியுமா’ என்று வலிகாமம் வடக்கு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்று செவ்வாய்கிழமை வலிகாமம் வடக்கு பிரதேச சபை அலுவலகத்தில் நடைபெற்ற வலிகாமம் வடக்கு காணி அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடலின் போதே அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினர்.

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை ஒட்டப்பட்டுள்ள காணி சுவீகரிப்பு நோட்டிஸ் உடனடியாக அகற்றப்பட்டு அப்பகுதியில் தங்களை உடனடியாக மீள்குடியேற்ற வேண்டும். இதனை உடனடியாக செய்யத்தவறினால் எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படும்’ என்றும் அம்மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

‘1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த நாம் இன்று வரை பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றோம். அரசாங்கம் எங்களை மீள்குடியேற்றம் செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்த எமக்கு தற்போது எமது காணி படையினரின் தேவைக்கு எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கடந்த முறை நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 3 மாத்திற்குள் வலி வடக்கில் மீள்குடியேற்றம் இடம்பெறும் என்று அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார். 8 மாதங்கள் கடந்த நிலையில் இன்னமும் மீள்குடியேற்றம் நடைபெறவில்லை அதற்கு மாறாக எமது வளமான பூமிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன’ என்றும் அம்மக்கள் சுட்டிக்காட்டினர்.

23 மூன்று வருடங்களாக நாங்கள் அகதிகளாக முகாம்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழந்து வருகின்றோம். நாங்கள் 23 வருடங்காக வாழும் வாழ்கையை ஒரு நாள் அமைச்சர் டக்களஸ் தேவாந்தாவும் யாழ் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவினாலும் வாழ்ந்து பார்க்க முடியுமா?.

இவ்வாறு நாங்கள் கதைத்தால் நாளை நாங்கள் காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பிடித்து விடுவோம் என்று தெரியும். இருந்தாலும் தலைக்கு மேல் போய்விட்டாதால் எங்கள் பிரச்சனைகளுக்கு உடனடித்தீர்வு கிடைக்க வேண்டும்’ என்றனர்.

எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் போராட்டம் தொடரும் என்றும் இது படிப்படியாக மாவட்டச் செயலகத்தினை முற்றுகையிடும் பேராட்டமாக மாற்றமடையும்’ என்று அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts