மனிதாபிமான ரீதியில் இணைந்து கொள்வோம், அரசியல் ரீதியில் இணைவதற்கு இருவருக்கும் இடையில் பல தடைகள் இருக்கிறது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினைப் பார்த்துக் கூறினார்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் தங்குமிட விடுதி திறப்பு விழாவில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, டக்ளஸ் தேவானந்தாவும், விக்னேஸ்வரனும் உரையாடும் போதே விக்னேஸ்வரன் இவ்வாறானதொரு கருத்தினை வெளியிட்டார்.
இதன் போது முதலமைச்சர் ‘தனிப்பட்ட ரீதியில் மனிதாபிமானத்துடன் நாம் இணைந்து கொள்வோம். ஆனால் அரசியல் ரீதியில் இணைந்து கொள்வதற்கு பல தடைகள் இருக்கின்றன. இதனை ஊடகங்கள் வேறு விதமாக சித்தரிக்கும்’ என்றார்.
அதற்குப் பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா ‘எனக்கு கைலாகு கொடுப்பதில் பிரச்சினை இல்லை. அவருக்கு பிரச்சினை ஏற்படாமல் இருந்தால் சரி’ என்று சிரித்தவாறே கைலாகு கொடுத்தார். இவர்கள் இருவரின் உரையாடலினை அங்கிருந்தவர்கள் பார்த்து சிரித்துக்கொண்டனர்.