Ad Widget

ஜே.பி.எல். வெற்றிக்கிண்ணம் சென்றலைட்ஸ் வசமானது

கே.சி.சி.சி அணியை 7 விக்கெட்டுக்களால் இலகுவாக வென்ற சென்றலைட்ஸ் அணி ஜே.பி.எல். வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது.

jpl-central

‘யெப்னா பிறிமியர் லீக்’கின் இரண்டாவது தொடர் கடந்த மே 10 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வந்தது.

இந்த சுற்றுப் போட்டியில் 18 அணிகள் பங்கேற்றிருந்தன. இதன் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த இறுதியாட்டத்தில் நடப்புச் சம்பியனான கொக்குவில் மத்திய சனசமூக நிலைய (கே.சி.சி.சி.) அணியும் சென்றலைட்ஸ் அணியும் மோதின.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கே.சி.சி.சி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்கம் கொடுத்த பங்குஜன், ஜெயரூபன் இணையால் நீடிக்க முடியவில்லை பங்குஜன் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உமாநாத் 10 ஓட்ங்களுடன் ஆட்டமிழக்க ராகுலன் களமிறங்கினார் இந்நிலையில் ஜெயரூபன் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் எவரும் சிறப்பாக செயற்படாத நிலையில் 19.5 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு கே.சி.சி.சி சகல விக்கெட்களையும் இழந்தது.

சென்றலைட்ஸின் பந்துவீச்சில் டார்வின் 4 விக்கெட்களையும், ஜெரிக்துஷான், கோகுலன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதில் எட்வர்ட் எடின் 20 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஜெரிக் துஷான் 44, செல்ரன் 33 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

ஆட்டநாயகனாக ஜெரிக்துஷான் தெரிவானார்.

Related Posts