Ad Widget

ஜே.பி.எல் இறுதிப்போட்டியில் சென்றலைட்ஸ், கே.சி.சி.சி அணிகள்

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் என்று அழைக்கப்படும் ஜே.பி.எல் டுவென்டி – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

3(2376)

இந்த இறுதிப்போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியினை (கொக்குவில் கே.சி.சி.சி.) எதிர்த்து சென்றலைட்ஸ் அணி மோதவுள்ளது.

யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் இந்த டுவென்டி – 20 சுற்றுப்போட்டியானது இரண்டாவது ஆண்டாக கடந்த மே மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றியிருந்ததுடன், நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் இடம்பெற்று ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் காலிறுதிப்போட்டிக்குத் தெரிவாகின.

தொடர்ந்து, காலிறுதிப் போட்டிகளிலிருந்து பற்றீசியன், சென்றலைட்ஸ், கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், மற்றும் தெல்லிப்பளை யூனியன்ஸ் அணிகள் நுழைந்தன.

அரையிறுதியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி 48 ஓட்டங்களால் பற்றீசியன் அணியினையும், சென்றலைட்ஸ் அணி 79 ஓட்டங்களால் யூனியன்ஸ் அணியினையும் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

1(5609)

இறுதிப்போட்டிகளில் நுழைந்த இரண்டு அணிகளில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி கடந்த முறை ஜே.பி.எல். சம்பியனாகியிருந்த அணியாகும். ஆகவே தமது நடப்புச் சம்பியனைத் தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடும்.

2(3196)

சென்றலைட்ஸ் அணி வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்ட அணிகளுள் ஒன்றான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வீரர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அணி. மேலும், வரிசையான துடுப்பாட்ட வீரர்கள் கொண்ட அணியாகவிருப்பதினால் இம்முறை கிண்ணத்திற்கான வாய்ப்பு சென்றலைட்ஸ்க்கும் இருக்கின்றது.

சென்றலைட்ஸ் அணி ஜேம்ஸ் ஜான்ஸன் தலைமையிலும், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி ஆர்.இராகுலன் தலைமையிலும் களமிறங்குகின்றது.

Related Posts