ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வுகளைத் தோற்கடிக்க அரசாங்கம் தீவிர முயற்சி – மாவை

mavai mp inஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வுகளைத் தோற்கடிக்க அரசாங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணி மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்கான உத்தியோக அறிவிப்பை யாழ்ப்பாணத்தில் நேற்று வெளியிட்டது. அதனையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித மனித உரிமை பேரவை இன்று (நேற்று) ஆரம்பமாகிறது. எனினும் இந்த அமர்வானது தமிழர் சமூகம் உட்பட ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து காத்திருக்கின்ற முக்கிய இடமாகும்.

எனினும் அதனை தோற்கடிக்க அரசு தீவீர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. எனினும் போர் நடைபெற்ற காலத்திலும், இறுதிக்காலத்திலும் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என்பதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேசமும் வற்புறுத்தி வருகின்றது.

மேலும் நாம் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் அந்தந்த நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.

இருப்பினும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்த்து இருப்பவர் மத்தியிலும் நடுநிலை வகிப்போம் என்று கூறுபவர் மத்தியிலும் நாம் எமது தீர்மானத்தை வலுவிழக்க விடக்கூடாது.

எனினும் இந்த விசாரணைகள் வலுவுள்ளதாக இருந்தால் மட்டுமே உண்மைகள் வெளிப்படும். எனவே உள் நாட்டில் அரசாங்கம் நடத்தும் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை.

அதேபோலவே சர்வதேசமும் நம்பிக்கை இழந்தமையால் தான் இந்த ஆண்டு மனித உரிமைப் பேரவையிலும் ஒரு வலுவான சர்வதேச விசாரணை வேண்டும் என நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும் அந்த அறிக்கைகளில் தருஸ்மன் அறிக்கை ,அமெரிக்க இரரஜாங்க செயலகத்தை சேர்ந்தவர்கள், மனித உரிமை ஆணையாளர் நவிப்பிள்ளை மற்றும் பிரிட்டின் நாட்டைச் சேர்ந்தவர்களும் வடக்கு கிழக்கிற்கு வருகை தந்து நிலைமைகளை நேரில் கண்டறிந்து அறிக்கைகளை தயாரித்துள்ளனர்.

அந்த அடிப்படையில் கொண்டுவரப்படும் தீர்மானம் ஒரு வலுவுள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறான பிரேரணை ஒன்று வந்தால் மட்டுமே போரிலும் அதற்கு முன்னரும், பின்னரும் நிகழ்ந்த குற்றங்களுக்கான உண்மைகள் வெளிப்படும்.அவ்வாறு நடைபெற்றால் தான் நாட்டில் தீர்வும் ஏற்ப்படும் என்றார்.

Related Posts