Ad Widget

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவைச் சந்தித்தார் சீசெல்ஸ் சுகாதார அமைச்சர்

செல்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் திருமதி. மிற்சி லரு (Mrs. Mitcy Larue) நேற்று முன்தினம் பிற்பகல் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவைச் சந்தித்தார்.

da5507c9bb8a579bf46234b854d61f26_L

சீசெல்ஸின் சுகாதார நலன் முகவமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டொக்டர் சுரேஷ் மேனன் (Dr. Suresh Menon) மற்றும் மேலும் சீசெல்ஸின் சில உயர்நிலை சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து கொண்ட அமைச்சர் லரு, தனது நாட்டின் சுகாதாரத் துறையின் சில துறைகளை மேம்படுத்துவதற்கு இலங்கையின் உதவியை ஜனாதிபதி ராஜபக்க்ஷ விடம் கோரினார்.

இரண்டு தீவு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளின் அண்மைக்கால பலப்படுத்தலில் தனது திருப்தியை வெளிப்படுத்திய ஜனாதிபதி ராஜபக்க்ஷ இலங்கையின் உதவியை உறுதி செய்துள்ளார்.”இலங்கையில் நாங்கள் பார்த்துள்ள மாற்றங்களும், முன்னேற்றங்களும் மிகவும் சிறப்பு மிக்கன,” என திருமதி. லரு தெரிவித்தார்.

“இரண்டு தீவு நாடுகளாக, நாங்கள் மிகவும் இணைந்து பணியாற்ற வேண்டும்’. இந்த தூதுக்குழு இலங்கையிலுள்ள அரசாங்க, தனியார் வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததோடு, நாட்டில் கிடைக்கப்பெறவுள்ளதாக உள்ள சேவைகள் குறித்து உயர்வாகக் கருத்துத் தெரிவித்தனர்.

“உங்களுடைய சுகாதாரச் சுட்டிகள் அபிவிருத்தியடைந்த எந்தவொரு நாட்டினையும் போன்றளவுக்கு சிறப்பாகவுள்ளன,” என டொக்டர் மேனன் தெரிவித்தார். அத்தோடு, அவர் இரண்டு விசேட துறைகளில் ஜனாதிபதியிடம் உதவி கோரினார்:
1) பிரதான சுகாதார நிலையங்களை அபிவிருத்தி செய்வதில் உதவி;
2) வைத்தியர்கள், சிறப்பு நிபுணத்துவ தாதியர்களுக்கான உதவி;

இலங்கை வைத்தியர்கள் பலர் சீசெல்ஸில் பணி புரிவதோடு, அங்குள்ள மக்களுக்குச் மிகச்சிறப்பான சேவையாற்றி வருவதாக தூதுக்குழு சுட்டிக்காட்டியது.

நாட்டின் உயிரியல் மருத்துவப் பிரிவு ஏறத்தாழ முழுவதும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுவதாகவும் டொக்டர் மேனன் சுட்டிக்காட்டினார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி. ஷெனுகா செனவிரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி. சுதர்மா கருணாரத்ன ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Related Posts