Ad Widget

ஜனாதிபதி மற்றும் அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றில் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன: ரணில்

அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும் அரசியலமைப்பின் ஊடாக மக்களின் கருத்துகளையும் கேட்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றில் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்கள் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பின்படி செயற்பட வேண்டும் என்றும் அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியில் அமர்ந்து இந்த வேலையை செய்ய வற்புறுத்த முடியாது ன்றும் அரசியலமைப்பை பாதுகாக்கவே தான் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பை பாதுகாக்கவும் அரசியலமைப்பின் மூலம் மக்களின் கருத்தை கேட்கவும். தற்போது நமக்குத் தேவை அனைத்துக் கட்சி ஆட்சிதான் என்றும் அது உருவாக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts