Ad Widget

ஜனாதிபதியினால் யாழிற்கான லக்ஸபான மின்சார திட்டம் இன்று ஆரம்பம்

யாழ். குடாநாட்டுக்கு தேசிய மின்சாரம் வழங்கும் திட்டத்தை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் 10.45 மணிக்கு கிளிநொச்சியில் ஆரம்பித்துவைத்தார்.
ஜப்பானின் கடன் உதவியின் மூலமாக செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு 3200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து 238 மின் கம்பங்கள் மூலம் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்ட 132 கிலோவொட் தேசிய மின்சாரம் அங்கு அமைக்கப்பட்டுள்ள உப மின் நிலையத்தின் மூலம் யாழ். குடாவுக்கு இன்று விநியோகிக்கப்பட்டது.

அத்துடன் கிளிநொச்சியில் 37 மில்லியன் ரூபா செலவில்  அமைக்கப்பட்ட பொதுச் சந்தையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை திறந்துவைத்தார்.

அதன்படி சிறு மற்றும் நடுத்தர அளவிலான நகரங்களை கட்டியெழுப்பும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே கிளிநொச்சி பொதுச் சந்தை கட்டடத் தொகுதி இன்று மக்களின் பயன்பாட்டிற்காக ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டடத் தொகுதியின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு 37 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் 110 வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனினும் மேலும் 200 மில்லியன் ரூபா செலவில் அங்கு மேலும் மூன்று கட்டடத் தொகுதிகளை நிர்மானிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கும் ஜனாதிபதி தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற திறப்பு விழாவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ , பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  உள்ளிட்ட மின்சக்தி எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரிகளும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts