Ad Widget

சுமந்திரன் வாய் திறந்தால் பொய் மட்டுமே கூறி மக்களை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாய் திறந்தால் பொய் மட்டுமே கதைத்து மக்களை ஏமாற்றுவதாக தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையாக சாடியுள்ளார்.

Kajentherakumar

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஐ.நா விசாரணை அறிக்கை வெறும் அறிக்கை என கூறியிருக்கின்றார். அதற்கு உங்களுடைய கருத்து என்ன என வினவிய போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு சாடியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிக்கை வெறும் அறிக்கை மட்டுமே தான், வாய் திறந்தால் பொய் மட்டும் தான் கதைக்கின்றார். அதனடிப்படையில், இன்னொரு பொய்யினை கூறியிருக்கின்றார்.

சர்வதேச மனித உரிமைகள் மீறல் தனி மனிதனுடைய மனித உரிமைகள் மீறல், அந்த வகையில், தமிழ் தேசிய மக்கள் முண்னணியினர் ஆகிய நாம், சர்வ மனித உரிமை பேரவையின் விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிப்பதற்காகவே எதிர்பார்த்திருந்தோம்.

அந்த விசாரணை இறுதியில் வெறும் அறிக்கையில் வந்து முடிவடைய போகின்றதாக கூறினார். பொதுமக்கள் நினைக்கின்றார் சர்வதேச விசாரணை நடக்கப் போகின்றது. மக்களுக்கு நீதி நியாயம் கிடைக்கப் போகின்றது என்று, ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரனைப் பொறுத்தவரையில், மக்களின் நலன்களை பாதுகாக்கப் போவதில்லை.

சுமந்திரனின் எஜமான்களினால் வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் செயற்படுகின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

சர்வதே விசாரணை கண்துடைப்பிற்காக நடந்து முடிந்ததென கூறி, உள்ளக விசாரணை நடத்தி, சுமந்திரன் விரும்பாத நபர்களை குற்றவாளியாகவும், விரும்புகின்ற தரப்பினரை சுற்றவாளியாகவும் நிருபிப்பதற்காக செயற்படுகின்றார். அந்த விடயம் தமக்கு நன்றாக தெரியுமென்றும் அவர் கூறினார்.

சுமந்திரனை பொறுத்தவரையில், விசாரணை நிறைவடைந்து விட்டது, ஆனால் எமது மக்கள் முடிவெடுக்க வேண்டும். 2 லட்சம் மக்கள் கொல்லப்பட்டமைக்கு வெறுமனவே அறிக்கை மட்டுமா வேண்டுமென்ற முடிவினை எடுக்க வேண்டும்.

தமிழ் தேசிய மக்கள் முண்னணியினை பொறுத்தவரையில், ஆரம்பத்தில் இருந்து கூறிக்கொண்டு வருகின்றோம், பொறுப்புக் கூறல் என்ற விடயத்தில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. அதில், ஒன்று சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் இந்த விடயங்கள் கொண்டு சென்று, உரிய நபர்களுக்கு வழக்குகள் நடாத்தப்பட்டு, தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அல்லது, இலங்கை விடயத்தில் விசேடமான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு, இங்கு அந்த விசாரணைகள் நடாத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே எமது குறிக்கோள், மற்றவைகள் அனைத்தும் ஒரு கண்துடைப்பாக இருக்கும்.

ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்ட பின்னர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அறிக்கை பிற்போடப்பட்டுள்ளமை எமக்கு நன்மை பயக்க கூடியவகையில் அமைந்திருக்கின்றது. பலமாக அறிக்கைகளை சமர்ப்பித்தால், நீதியான விசாரணை நடைபெற்று மக்களுக்கு நன்மை கிடைக்குமென்று கூறியிருந்தார் என்றும் சுட்டிக்காட்டியதுடன், மக்களிடம் பலமாக சாட்சியமளிக்க முன்வர வேண்டுமென்று கூறியது என்ன நடந்ததென்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சாட்சியங்கள் பதிவு செய்வதை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முண்னணியினராகி நாம், ஆனால், அவற்றினைக் குழப்பியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related Posts