சுகாதார பணிமனை மீது கல்,கழிவொயில் வீச்சு

rdhயாழ் மாநகர சபையின் சுகாதார பணிமனை மீது இனந்தெரியாத நபர்களால் கல் மற்றும் கழிவொயில் வீச்சுத் தாக்குதல் புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

யாழ் மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று யாழ் மாநகர சபையில் நடைபெற்றது. இதன்போதே முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் பணிமனையிலுள்ள 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளினை மேற்கொண்டதாகவும் முதல்வர் மேலும் தெரிவித்தார்.

Related Posts