Ad Widget

சுகாதாரம், கல்வி உட்பட அனைத்து துறைகளையும் பலப்படுத்த இம்முறை வரவுசெலவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

சுகாதாரம், கல்வி உட்பட அனைத்து துறைகளையும் பலப்படுத்த இம்முறை வரவுசெலவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் சமூக நலன்புரியை இவ்வரவுசெலவில் மறக்கப்படவில்லையெனவும் போக்குவரத்துதுறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

வரவுசெலவின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இவ்வரவுசெலவு தொடர்பில் நாம் ஆராய வேண்டும். அதில் குறுகியகால மற்றும் நீண்டகால திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் உண்மை நிலைமையை மறந்து வரவுசெலவு பற்றி கதைக்க முடியாது. மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்கள், சம்பள உயர்த்தி வரவுசெலவு என்பவற்றை கருத்திற்கொண்டு வரவுசெலவை மேற்கொள்ள முடியாது. நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை கருத்திற்கொண்டே அவற்றை மேற்கொள்ள ​வேண்டும்.

ஆசியாவில் சிறந்த சுகாதார சேவை இலங்கையில் உள்ளது. அனைத்து அரசும் இலவச சுகாதார சேவை தொடர்பில் கவனம் செலுத்தியது. இலவச சுகாதார சேவையை மேம்படுத்த இம்முறை வரவுசெலவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான இல்லப்பிரச்சினைக்கு இம்முறை வரவுசெலவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் தூர பிரதேசங்களுக்கு ஆசிரியர்களை அனுப்புவதில் சிக்கல்கள் ஏற்படுவதில்லை. கைவிடப்பட்ட பாடசாலைகளுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து தொடர்பில் பாரிய செயற்றிட்டமொன்று மேற்கொள்ளப்படுகிறது. திறந்த வான் கொள்கையொன்று உள்ளது. அனைத்து தரப்பினர்களுடனும் கலந்துரையாடி, திறந்த வான் கொள்கையை உருவாக்கப்படவேண்டும். இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர் நம்பிக்கை நிதியத்தை வழங்க செயற்றிட்டமொன்று மேற்கொள்ளப்படுகிறது.

மத்தளை விமான நிலையத்தை பயனுள்ள வகையில் செயற்படுத்த விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்கு முதலீட்டை அதிகரிக்கச் செய்ய திட்டங்கள் தீட்டப்படுகின்றன. மத்தளை விமான நிலையத்திற்கு செலவிட்ட பணத்தை மீள பெறவேண்டும் என அவர் மேலும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts