Ad Widget

சீட்டு, வட்டிக்கு கடன் பரிமாறும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் – யாழ். பொலிஸ்

Sl_police_flagசட்டவிரோத நிதி நடவடிக்கைகளான சீட்டு மற்றும் வட்டிக்கு கடன் பரிமாறும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களிடம் யாழ். பொலிஸ் பரிசோதகர் ஜ.பி.அமரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் காசோலை மோசடிகள் அதிகமாக நடைபெறுவதற்கு மக்களின் விழிப்புணர்வின்மையே காரணமாகும். குறித்ததொரு மாதத்திற்கான காசோலைகளை அடுத்த மாதம் வழங்கும்போது, காசோலைகளின் திகதிகள் மாற்றப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்படும் காசோலைகள் வட்டிக் கடனுக்காக வழங்கப்படுகின்றன.

இவ்வாறு காசோலைகள் வழங்குபவர்கள் சட்டவிரோதமாக சீட்டுக்கள் பிடிப்பவர்கள் மற்றும் வியாபார நோக்கத்திற்காக வழங்குகின்றார்கள்.

பொலிஸ் நிலையத்தில் காசோலை மோசடி என முறைப்பாடு பதிவு செய்த பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்போது, நீதிமன்றத்தில் வட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் முறைப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள். அதனால் பொலிஸாரினால் நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றது’ என்றார்.

அந்த வகையில், காசோலைகள் மற்றும் சீட்டு பிடிப்பவர்கள் பதிவுசெய்யப்பட்ட சீட்டுக் கம்பனிகளுடன் சீட்டுக்களை போடுமாறும் சட்டவிரோதமான சீட்டு மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Posts