யாழ். சிறைச்சாலையில் கைதி ஒருவர் சிறைக்காவலரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சிறைக்காவலரை இடைநிறுத்தம் செய்திருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மேலதிக தகவலைப் பெற்றக்கொள்ள யாழ்.சிறைச்சாலையுடன் தொடர்பினை மேற்கொண்ட போது அவர்கள் மழுப்பலான பதில்களை அளித்ததுடன் தொடர்பையும் துண்டித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.