Ad Widget

சிம்பாவேக்கு முதல் வெற்றி

சிபண்டாவின் அதிரடியான ஆட்டத்தால் 14 ஓட்டங்களால் ஹொங்கொங்கை வென்று முதல் வெற்றியை ருசித்தது சிம்பாவே.

ருவென்ரி- 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் நேற்று இந்தியாவில் ஆரம்பமானது. இதில் ஐ.சி.சி. தரவரிசையில் முன்னிலை வகிக்கும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் சுப்பர்-10 சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டன. மீதமிருக்கும் இரு இடங்களையும் பிடிக்க பங்களாதேஷ், சிம்பாவே உள்ளிட்ட 8 அணிகள் தகுதிச் சுற்றில் மோதுகின்றன.

sibanda20160309

இதில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் சிம்பாவே, ஹொங்கொங் அணிகள் நாக்பூரில் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற ஹொங்கொங் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்ட சிம்பாவே துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரரான மஸகட்ஸா 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரரான சிபண்டா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் வந்த முதும்பவி 0, வில்லியம்ஸ் 12, சிகந்தர் ராஸா 3, வோலர் 26 என அவுட் ஆகினர். 5 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்களுடன் 59 ஓட்டங்களைக் குவித்த சிபண்டாவும் ஆட்டமிழக்க சிகும்புரா களம்புகந்தார். வந்தவேகத்திலேயே அடித்தாடிய அவர் 3 சிக்ஸர்களை விளாசி 13 பந்துகளில் 30 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

20 ஓவர்கள் நிறைவில் சிம்பாவே 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.

ஹொங்கொங்கின பந்து வீச்சில் தன்வீர் அப்ஷல், அய்ஷஸ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பின்னர் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணிக்கு தொடக்கம் கொடுத்த அட்கின்ஸன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுபுறத்தில் வந்த கம்ப்வெல் 9, பாபர் ஹாயத் 9, சப்மன் 19 என சொற்ப ஓட்டங்ளுடன் ஆட்டமிழந்தனர். 4 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்களுடன் 53 ஓட்டங்களைக் குவித்த அட்கின்ஸனும் ஆட்டமிழக்கவே அடுத்து வந்த அனுஷ்மன் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்த ஹொங்கொங் அணி 144 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. தன்வீர் அப்ஷல் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

சிம்பாவேயின் பந்துவீச்சில் திரிபனோ, சதாரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக சிபண்டா தெரிவானார்.

Related Posts