Ad Widget

சாவகச்சேரி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

சாவகச்சேரி உதயசூரிய கிராமத்தில் தற்காலிகமாக அரச காணியில் வசிக்கும் 50 மேற்பட்ட குடும்பங்களுக்கு காணிகளின் உரிமங்கள் வழங்கப்படும் என்றும் இல்லையேல் வேறு இடங்களில் காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச செயலர் திருமதி அ.சாந்தசீலன் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்த அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

சாவகச்சேரி உதயசூரிய கிராமத்தில் தற்காலிகமாக அரச காணியில் வசிக்கும் 50 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் தாங்கள் குடியிருக்கும் காணிகளின் உரிமங்களை வழங்குமாறு கோரி சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் சுகாதாரத் தொழிலாளிகளாகக் கடமையாற்றி வருகின்ற தமக்கு அரச காணியினை பகிர்ந்தளிக்கும் பட்சத்தில் நகராட்சி மன்றத்தினால் தமக்கு வீடுகள் கிடைக்கும் என்றும், இதனால் தமக்கு காணி உரிமையினை வழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தபோதும், அவர்கள் செயற்படுத்தவில்லை என்பதால் மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைச் சந்தித்த சாவகச்சேரி பிரதேச செயலர் திருமதி அ.சாத்தசீலன், இதுதொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து அவர்களின் அனுமதியுடன் உங்களுக்கு மேற்படி பிரதேசத்தில் காணி வழங்கப்படும். இல்லையேல் வேறு இடங்களில் உங்களுக்கு காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

தொடர்புடைய செய்தி

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

Related Posts