Ad Widget

சர்வதேசம் வழங்கும் கால அவகாசத்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பு – ஜேர்மன் தூதுவரிடம் அனந்தி

ananthi_sashitharanஇலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசம் வழங்கி வருகின்ற கால அவகாசங்களால் புதிய புதிய பிரச்சினைகளையே தோற்றுவிக்கும் என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜேர்மன் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டு வந்திருந்த ஜேர்மன் தூதுவர் யூர்ஜென் மொகாட் நேற்று இரவு வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனைச் சந்தித்து தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடினார். அதன்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் போதும் சர்வதேசத்தால் வழங்கப்பட்டு வருகின்ற கால அவகாசங்களே இலங்கை அரசு இன அழிப்பினை முன்னெடுக்க வழிகோலியது. அதேபோல எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள அமர்விலும் கால அவகாசம் வழங்கப்பட்டால் பல புதிய பிரச்சினைகள் உருவாகும்.

அதன்படி எமது மக்களே அதனையும் எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவ்வாறான நிலை தொடர்ந்தும் இடம்பெற்றால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்.

அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் அரசு அக்கறையின்றி உள்ளது. இந்தநிலையில் நேற்றும் அரசியல் கைதியொருவர் சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணமும் சந்தேகத்தினையே ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Related Posts