எம்மை சர்வதேசம் மீண்டும் ஏமாற்றி விட்டது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில் காணமல் போனோரின் நிலை, அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றை வலியுறுத்தி நாம் மேற் கொண்டு வந்த செயற்பாடுகளால் சர்வதேசம் எம்மீது அக்கறை கொண்டு நடவடிக்கை எடுக்கும் என நான் நினைத்திருந்தேன். ஆனால் அது வீணாகிவிட்டது.
காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் கைதானோரின் உறவுகள் ஜெனிவாவில் தமக்கு நீதி கிடைக்கும் என காத்திருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கை வீண் போய் விட்டது என கண்கலங்கியபடி தெரிவித்திருந்தார்.