Ad Widget

சம்பந்தன் பெற்ற வீடுகளுக்கு ஈ.பி.டி.பி உரிமை கோருகின்றது: சிவாஜிலிங்கம்

தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவுடன் கதைத்துப் பெறும் வீடுகளை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் தாம் பெற்று வழங்கியதாகக் கூறி, மக்களுக்கு வழங்குவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டினார்.

sivajilingam_tna_mp

வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர் (14 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (21) இடம்பெற்றது.

இதன்போது, இந்திய வீட்டுத்திட்டத்தில், பயனாளிகள் தெரிவில் பின்பற்றப்படும் புள்ளிகள் வழக்கும் நடவடிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் அக்கறை செலுத்தப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட சிவாஜிலிங்கம், “சம்பந்தன் பெற்றுவரும் வீடுகளை ஈ.பி.டி.பி தாம் பெற்று வழங்குவதாகக்கூறி மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

தற்போதுகூட, சம்பந்தன் இந்திய நிதியுதவியில் 50 ஆயிரம் வீடுகளைப் பெறுவதற்காக, இந்தியா சென்றுள்ளார். அதனையும் ஈ.பி.டி.பி தாங்கள் பெற்று வழங்கியதாகக் கூறி மக்களுக்கு வழங்குவார்கள்” என அவர் மேலும் கூறினார்.

Related Posts