Ad Widget

சமன்சிகேரா உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவியுயர்வு

யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா யாழ்.மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதியில் இருந்து சமன் சிகேரா பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக மார்ச் மாதம் 31 ஆம் திகதி இரவு பொலிஸ் திணைக்களத்தினால் சமன் சிகேராவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

களனி தர்மலோக மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் 1988 ஆம் ஆண்டு களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பொலிஸ் பரிசோதகராக பயிற்சி பெற்றதன் பின்னர் கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் ரத்துகம, மாவனல்ல, சீதுவ, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக இவர் கடமையாற்றி வந்தார்.

இதன்பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பதவியுயர்விற்கான பரீட்சையினை முடித்த பின்னர் யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவியுயர்வு பெற்றார்.

யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கான பதவிப் பிரமாணத்தினை எதிர்வரும் வாரங்களில் சம்பிரதாயப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவுள்ளதாக யாழ்.தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகேரா மேலும் கூறினார்.

Related Posts