Ad Widget

சங்கத்தானை மக்களிற்கு பொய்யான வாக்குறுதி வழங்கிய டக்ளஸ்

சாவகச்சேரி சங்கத்தானை மக்களிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை காலமும் நிறைவேற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

சங்கத்தானை பெரிய மாவடியையும் A9 வீதியையும் இணைக்கும் வீதியின் ஊடாக புகையிரதப்பாதை அமைக்கப்பட்டு இவ் வீதி போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 5 தடவைகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

01.04.2014 அன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரும் போது
01.04.2014 அன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரும் போது

இந்த நிலையில் 01.04.2014 அன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது நகர சபையினர் அமைக்க வேண்டிய வீதி, நான் இப்பொழுது கொழும்பு செல்லுகின்றேன் அங்கு இது தொடர்பாக நான் சம்பத்தபட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வீதியை பாவனைக்கு தருவதாக வாக்குறுதி வழங்கியிருதார்.

இருப்பினும் குறித்த வீதியினை புனரமைப்பதற்கான முன்னேற்பாடுகள் இதுவரை காலமும் செய்யப்படவில்லை எனவும் சங்கத்தானை மீனாட்சியம்மன் கோவில் வீதி மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன் உள்ள வீதி ஆகியவை புனரமைப்பு பணிகள் ஆரம்பித்திருப்பதால் இவ்விரண்டு வீதிக்கும் இடைப்பட்ட குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை என்பதால் டக்ளஸ் எமக்கு பொய்யான வாக்குறுதி வழங்கி ஏமாத்த நினைக்குறார் என அப்பகுதி மக்கள் செய்தி இணையத்தளம் ஒன்றிற்க்கு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ் வீதி சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட வீதி என்பதால் நகர சபையினர் புகையிரத திணைக்களத்துடன் கலந்தாலோசித்து இவ் வீதியினை பாவனைக்கு தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts