Ad Widget

கோரோனா பரவல்; வரும் 7 நாள்கள் தீர்மானம் மிக்கவை – இராணுவத் தளபதி

“நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகையால், எதிர்வரும் 7 நாள்கள் தீர்மானமிக்கவை” என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

“நாட்டின் பல்வேறு பகுதிகளில் 16 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு கோரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆகையால், எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது” என்று அவர் குறிப்பிட்டார்.

மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றிய சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாத
ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 0113456548 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், அநுராதபுரம், பதுளை, காலி, குருநாகல், மொனராகலை, புத்தளம் கேகாலை, களுத்துறை, கண்டி, மாத்தறை, பொலன்னறுவை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கடந்த 4 நாள்களில் கோவிட் -19 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படுவதுடன், அவர்களுடன் தொடர்புடையோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts