Ad Widget

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் பொதுமக்களின் வீடுகள் காணிகள் கையளிப்பு

kopay-daklas-haththurusingaவலி.கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் படைத்தரப்பினர் வசமிருந்த ஒருதொகுதி வீடுகளும், காணிகளும் பொதுமக்களிடம் நேற்றய தினம் கையளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மண்டபத்தில் பொதுமக்களின் வீடுகள் மற்றும் காணிகளுக்கான பத்திரங்கள் நேற்றய தினம் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, அச்சுவேலி உரும்பிராய் மற்றும் அச்செழு ஆகிய பகுதிகளிலுள்ள 42 வீடுகளும், 23 காணிகளுக்குமான பத்திரங்களை யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வழங்கி வைக்க அவற்றை வலி.கிழக்கு பிரதேச செயலர் பிரதீபனிடம் அமைச்சர் அவர்கள் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இதில் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க உரையாற்றும் போது யுத்த சூழல் காரணமாக 1995 ம் ஆண்டு இப்பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர வேண்டிய நிலையேற்பட்டது. கடந்த கால யுத்தத்தால் மக்கள் உயிர்களை மட்டுமல்லாது தமது வாழ்வாதாரத்தையும் சொத்தையும் இழந்து வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது உட்கட்டுமானம் உள்ளிட்ட மக்களுக்கான பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமை மற்றும் ஆலோசனைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டலுக்கு அமைவாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.

இதனிடையே இவ்வாறான அபிவிருத்தி செயற்திட்டங்களை விரும்பாத சிலர் இவற்றைக் குழப்பும் வகையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், அரியாலையில் 512 ஆவது பிரிகேட் கீழான மக்களுக்கான வீடுகளும், காணிகளும் கையளிக்கப்பட்டது போன்றும், 511 ஆவது பிரிகேட் கீழான அச்சுவேலி உரும்பிராய் அச்செழு ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளும், காணிகளும் இன்றைய தினம் (நேற்று) கையளிக்கப்பட்டது போன்று விரைவில் 513 ஆவது உடுவில் பகுதிகளிலுள்ள பொதுமக்களின் வீடுகளும், காணிகளும் விரைவில் கையளிக்கப்படுமென்றும் உறுதிமொழி வழங்கினார்.

இதன்போது கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி அமிர்தலிங்கம், இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகளும் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அரியாலையில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த வீடுகள் விடுவிப்பு

இராணுவ பயன்பாட்டிலிருந்த 112 இடங்கள் விடுவிப்பு

தனியார் காணிகள், வீடுகளிலிருந்தும் இராணுவத்தினர் வெளியேறுவர்: கட்டளைத் தளபதி

Related Posts