கொடிகாமம் நாவலடி பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்கதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் அதே பகுதியினைச் சேர்ந்த கந்தசாமி ஸ்ரீகரன் (21) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
குறித்த நபர் வீதியால் சென்றுகொண்டிருந்த போது, இவரைப் பின்தொடர்ந்த சிலரே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதலினை மேற்கொண்டுள்ளனர். இதில் ஸ்ரீதரனுக்கு கைவிரல்கள் துண்டிக்கப்பட்டதுடன், கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
முதலில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் தொடர்ந்து மேலதிக சிசிக்சைகளுக்கான யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கொடிகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.