கேகாலையில் அதிகூடிய மழைவீழ்ச்சி!!

கடந்த சில மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தின் மாலிபொட பகுதியில் பதிவாகியுள்ளதுடன், அவ்வாறு பதிவான மழைவீழ்ச்சியின் அளவு 104 மில்லி மீற்றர் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கேகாலை மாவட்டத்தின் களுபஹன பகுதியில் 95.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா பகுதியில் 85.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.

அத்துடன் குருநாகல் மாவட்டத்தின் பொல்பித்திகம பகுதிக்கு 85.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், இரத்தினபுரி மாவட்டத்தின் தம்முல்ல பகுதிக்கு 82.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கிடைத்துள்ளன.

இதனிடையே, நாடு முழுவதும் நிலவும் தீவிரமான தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts