Ad Widget

கூட்டமைப்பை உடைக்க முடியாது: சீ.வி.கே

c-v-k-sivaganamதமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைப்பதற்கு சிலர் கனவு காண்கின்றார்கள். ஆனால், கூட்டமைப்பை எவராலும் உடைக்கமுடியாதென்று தமிழரசு கட்சியின் துணைச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அந்த சந்திப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் பதிலளிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் ஒற்றுமையை சிதைக்க சிலர் முயற்சிக்கின்றனர். அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம்.

அதேவேளை, தமிழர் விடுதலை இயக்கம் தமிழரசு கட்சியை விட்டு விலகாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அத்துடன், நம்பிக்கைதான் வாழ்க்கை அரசியலில் முரண்பாடுகள் இருக்கதான் செய்கின்றன. ஆனால், அவற்றினை ஏற்று நடக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்வதென்பதில் சில உத்திகள் இருப்பதாகவும், கட்சியாக பதிவு செய்வதில் இரண்டு வகை இருப்பதாகவும், அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனியாக பதிவு செய்வதா அல்லது கூட்டாக பதிவு செய்வதா என்பதுதான் முக்கியமானதென்றும் அவர் கூறினார்.

கூட்டமைப்பை உடைப்பதல்ல எல்லோரினதும் இலச்சியமாகும் என்பதனை நினைவுப்படுத்த விரும்புகின்றேன் என்றும் அவர் சொன்னார்.

கூட்டமைப்பு ஒருபோதும் உடையாது என்பதுடன் கூட்டமைப்புக்குள் தனிக்கட்சிக்கு இடமில்லை என்றும், கூட்டாக பதிய முடியுமென்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அன்னியர்கள் எங்கோ இருக்க நாங்கள் ஏன் அடிபட வேண்டுமென்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையுமென்றும் சிலர் கனவு காண்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.

Related Posts