Ad Widget

ரணிலுக்கு கூட்டமைப்பு ஆதரவு!! : நாடாளுமன்றில் சம்பந்தன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரவளிக்கப்போவதில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் இதனை அறிவித்தார்.

“தேசிய அரசுக்கு தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆணையை மக்கள் வழங்கினர். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த ஆணையை நிறைவேற்றவேண்டும் என்ற அழுத்தத்தை கொடுக்கும்.

2015ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக வாக்களிக்கவேண்டாம் என நாடாளுமன்றைக் கேட்டுக்கொள்கின்றேன்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட காலமும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களும் இந்த பிரேரணை அரசியல் நோக்கம் கொண்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளது” என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

Related Posts