Ad Widget

கூட்டமைப்பு நாளை நாடு திரும்பும்?

தமிழ்நாட்டில் தங்கியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளையதினம் இலங்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNA-logo

இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்றக் குழு ஒன்று இந்தியா சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த பின்னர், தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமை சந்திக்கும் நோக்கில் இந்த குழு அங்கு தங்கியுள்ளது.

எனினும் தமிழக முதல்வரை சந்திப்பதற்கான காலம் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பெரும்பாலும் நாளையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களின் விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பும் என்று கூறப்படுகிறது.

Related Posts