Ad Widget

குடிதண்ணீர் விநியோகம் நிறுத்தம்; வலி. கிழக்கு மக்களுக்கு பாதிப்பு

save- waterவலி.கிழக்குப் பிரதேசசபை கடந்த நான்கு நாள்களாக இருபாலை, கோப்பாய் கிராமங்களுக்கான குடிதண்ணீர் விநியோகத்தைத் திடீரென நிறுத்தியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் குடிதண்ணீர் இன்றிப் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

பிரதேச சபையின் பவுசர் மூலம் இந்தப்பகுதி மக்களுக்குத் தினமும் இரண்டு தடவைகள் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு அருகில் உள்ள நன்னீர் குழாய்க் கிணற்று நீர் மூலம் கடந்த சில வருடங்களாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

கடும் வறட்சியான இந்தக் காலத்தில் குடிதண்ணீர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளமை குறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விசனம் தெரிவிக்கின்றன.

“ஆளணி வசதி இன்மையாலேயே இந்த இக்கட்டான நிலைமை தோன்றியுள்ளது.

பவுசர் சாரதி இன்மையால் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. தற்காலிக நியமனத்தில் இருந்த சாரதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான மாற்று வழிகளைக் கையாளத் திட்டமிடப்பட்டு வருகிறது” என்று வலி.கிழக்கு பிரதேச சபைத் தலைவர் அ.உதயகுமார் கூறினார்.

Related Posts