Ad Widget

கீரிமலையில் கடற்படையினரின் தேவைகளுக்காக காணிகள் சுவீகரிப்பு

ARMY-SriLankaவலி.வடக்குப் பகுதிகளில் பொது மக்களின் காணிகளை இராணுவத்தின் தேவைகளுக்காகச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன. கீரிமலை நகுலேஸ்வரம் பகுதியில் கடற்படையினரின் தேவைகளுக்காக மேலும் காணிகள் சுவீகரிப்பதற்காக அறிவிப்புகள் தற்போது ஒட்டப்பட்டுள்ளன.

வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டு 6 ஆயிரத்து 384 ஏக்கர் காணி சுவீகரிப்பதற்கான அறிவித்தல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஒட்டப்பட்டது. அதன்பின்னர் குறித்த காணிக்குரிய மக்கள் இராணுவத்தினரின் நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு இன்னமும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் கீரிமலையில் ஜே/226 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 183 ஏக்கர் 3 ஏக்கரும் 2 பேர்ச் காணியைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தல் ஒட்டப்பட்டது. கடற்படையினரின் தேவைக்காகவே இந்தக் காணி சுவீகரிக்கப்படுகின்றது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவற்றுக்கு மேலதிகமாக ஜே/222 கிராம சேவையாளர் பிரிவில் 40 பேர்ச் தனியார் காணியைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தல் அண்மையில் ஒட்டப்பட்டுள்ளது. இந்தக் காணியும் கடற்படையினரின் தேவைக்காகவே எடுக்கப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts