Ad Widget

கிளிநொச்சியில் 244 பேருக்கு பன்றிக் காய்ச்சல்! கர்ப்பிணி பெண்களுக்கு எச்சரிக்கை!!

கிளிநொச்சியில் 37 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் உறுதிசெய்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் கர்ப்பிணி தாய்மார்கள் எனவும் 9 பேர் சிறுவர்கள் எனவும் தெரிய வருகின்றது.

திருநகர், புதுமுறிப்பு, தர்மபுரம், முரசுமோட்டை, வேரவில், உதயநகர், கனகாம்பிகைக்குளம், மலையாளபுரம், இராமநாதபுரம், கிருஸ்ணபுரம், சாந்தபுரம், புளியம்பொக்கணை, திருவையாறு, செல்வநகர், வட்டக்கச்சி, முகமாலை, கல்மடுநகர், புன்னைநீராவி, புலோப்பளை ஆகிய இடங்களில் இருந்து பன்றிக்காய்ச்சல் தொற்றிற்குள்ளான கர்ப்பிணிப்பெண்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கண்டாவளை, விவேகானந்தநகர், ஸ்கந்தபுரம், கல்மடுநகர், உமையாள்புரம், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் இருந்து 12 வயதிற்குக் குறைவான குழந்தைகள் பன்றிக்காய்ச்சல் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

உதயநகர் மேற்கு, புதுமுறிப்பு, கல்மடுநகர், திருவையாறு ஆகிய இடங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கர்ப்பிணிப்பெண்கள் பன்றிக்காய்ச்சல் தொற்றிற்கு உள்ளான நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு பன்றிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளான அனைவரும் பொது இடங்களில் சந்தித்தித்துள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் இரு வாரங்களாவது கர்ப்பிணி பெண்கள் பொது இடங்களில் சந்திப்பதை தவிர்க்குமாறு கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் கேட்டுக்கொண்டுள்ளது.

எனவே கர்ப்பிணி தாய்மாரோ அல்லது குழந்தை பிரசவித்தவர்களோ காய்ச்சல் ஏற்படின் உடனடியாக அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சலுக்கு உள்ளான குழந்தை கடந்த 10 ஆம் திகதி இனங்காணப்பட்டதை அடுத்து, கடந்த 3 ஆம் திகதி வரை 244 பேருக்கு சந்தேகத்தின் பேரில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts