Ad Widget

கிரிக்கெட் வரலாற்றில் அதிசயமான முறையில் ஓட்டங்களை குவித்த மகளிர் அணி

தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற 19 வயதுக்குற்பட்ட பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் வரலாறு காணாத சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

டி20 போட்டியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் உள்ளூர் கிரிக்கெட் அணியான புமலங்கா அணியைச் சேர்ந்த சானியா லீ சுவார்ட் என்ற பெண் வீராங்கனை தனியொரு ஆளாக நின்று 84 பந்துகளில் 160 ஓட்டங்களை விளாசியுள்ளார்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவருடன் களமிறங்கிய அனைவரும் ஒரு ஓட்டத்தைக்கூட பெறாமல் டக்கவுட் ஆகிய நிலையில் தனியாளாக நின்று 160 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்த போட்டியில் குறித்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இதில் சானியா லீ சுவார்ட் 160 ஓட்டங்களும் உதிரியாக பெற்றுக்கொள்ளப்பட்ட 9 ஓட்டங்களுமே அடங்குகின்றன.

அணி வீரர்கள் 8 பேர் ஒரு ஓட்டங்களை கூட பெறாமல் டக்கவுட் ஆகிய நிலையிலும் தனியாளாக நின்று சானியா லீ சுவார்ட் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

Related Posts