Ad Widget

கிராமசேவகரைத் தாக்கிய மாநகரசபை ஊழியர்

fight-warகாங்கேசன் துறை வீதியில் சிவலிங்கப்புளியடியில் புனரமைக்கபட்டுவரும் வாய்க்காலை மூடும் வகையில் மண்ணைப் போட்டதால் அருகிலுள்ள வீட்டுஉரிமையாளர் யாழ். மாநகர சபை ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சிவலிங்கப் புளியடி பகுதியில் நீர் வழிந்தோடுவதற்காக அண்மையில் வாய்க்கால் வெட்டப்பட்டது.

இந்த நிலையில் அருகிலிருக்கும் கிராமசேவகர் அவசர தேவைக்கு வாகனத்தை வெளியே எடுப்பதற்காக அவரது வீட்டு வாயிலின் முன்பக்கத்தை தற்காலிகமாக மண்ணால் மூடியிருந்தார்.

இது தொடர்பில் அயலவர்கள் யாழ். மாநகர சபைக்கு அறிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாநகர சபை ஊழியர்களுக்கும் கிராமசேவகருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து கிராமசேவகர் மாநகர சபை ஊழியரால் தாக்குதலுக்குள்ளானார்.

இந் நிலையில் கிராமசேவகர் உடனடியாக மண்ணை அகற்றுவதாக கூறியபோதும் மாநகர சபை தாங்களாகவே அதனை அகற்றுவதாகக் கூறி கனரக வாகனங்களின் உதவியுடன் மண்ணை அகற்றியுள்ளனர்.

Related Posts