Ad Widget

காட்சிப் பொருளாகிவிட்டோம்: வேடுவத் தலைவர்

Veduvarவன வாழ்க்கையை இழந்த எங்களை, கண்காட்சிப் பொருளாக இந்த அரசாங்கம் நடத்தி வருகின்றது. அதனால், வேடுவர் வாழ்க்கையின் பாரம்பரிய விடயங்களை கடைப்பிடிக்க முடியாமல் உள்ளது.

தொழில் வாய்ப்புக்களுக்காக நகரங்களுக்குச் செல்லும் வேடுவர்குல இளைஞர் யுவதிகள், சிங்களவர்களை திருமணம் செய்துகொள்வதால் ஆதிவாசிகள் பரம்பரையைக் கொண்டு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவலிகே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார்.

‘ஆதிவாசிகள் பரம்பரையை எதிர்காலத்தில் காணக்கிடைக்காத நிலைமை எதிர்காலத்தில் உருவாகும். தற்போதுள்ள இளைஞர் யுவதிகளுக்கு பரம்பரை பாரம்பரியங்கள் தொடர்பில் விளக்கமளிக்க வழியில்லை.

காட்டு வாழ்க்கை எமக்கு தடை விதிக்கப்பட்ட வாழ்க்கையாகிவிட்டது. இதனால், எமது எதிர்கால சந்ததியினருக்கு மிருகங்கள் தொடர்பில் கற்பிக்கவும் முடியவில்லை. இயற்கை மருத்துவ முறைகள் தொடர்பில் கற்றுக்கொடுக்க முடியவில்லை. என்று அவர் குறிப்பிட்டார்.

Related Posts