காங்கேசன்துறையில் ரயில் தடம்புரண்டு விபத்து

இன்று காலை 07.00 மணியளவில் காங்கேசன்துறையில் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

train

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதமே இவ்வாறு தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

புகையிரதத்தின் கட்டுப்பாட்டு கருவி (பிரேக்) செயலிழந்தமையே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை புகையிரத திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

Related Posts