Ad Widget

கண்ணிவெடி அகற்றும் பணி இனி இராணுவத்திடம்

BOMS_minsஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவுள்ளன.

இதற்கான நடவடிக்கைகள் தேசிய மிதி வெடி செயற்பாட்டு நிறுவனத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்துடன் வடக்கிலுள்ள மிதிவெடி செயற்பாட்டு அலுவலகங்கள்யாவும் தமது பணிகளை முடித்துக் கொள்கின்றன.

ஒவ்வொரு பிராந்திய மிதி வெடி செயற்பாட்டு அலுவலகங்களையும் மூடும்பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. வடக்கில் கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையிலேயே பணியாற்ற முடியும்.

அதன் பின்னர் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள்யாவும் இராணுவத்தினரின் பொறியியல் பிரிவிடம் கையளிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மிதிவெடி செயற்பாட்டு நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக அதன் அதிகாரிகள் கொழும்பில் தெரிவித்தனர்.

Related Posts