Ad Widget

கண்காட்சியும் விற்பனைக் கூடமும்!

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சும், அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள, கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனைக் கூடமும்நேற்றய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

idb 9

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாக யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தோற்பொருள் உற்பத்தியகம், தும்புசார் கைத்தொழில் உற்பத்தி நிலையம், பற்றிக் கைத்தொழிற்சாலை, கைப்பணிகள் கைத்தொழில் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திகளே இங்கு காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

idb 7

இக்கண்காட்சி எதிர்வரும் 25 ம் திகதிவரை நல்லூர் மாநகர சபை வளாகத்திற்கு அருகில் தினமும் காலை 10.00 மணிமுதல் மாலை 7.00 மணிவரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts