Ad Widget

ஓய்வூதிய திட்டத்தில் 36,800பேர் இணைப்பு

pensionஓய்வூதிய திட்டத்துக்காக யாழ். மாவட்டத்திலிருந்து 36,800 பேர் இணைக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய புத்தகம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ‘அரச சேவையில் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி அரச சேவையற்றவர்களுக்கும் இந்த ஓய்வூதிய திட்டம் வழங்குவது பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக’ அவர் கூறினார்.

‘அந்த வகையில் ஓய்வூதியத் திட்டத்துக்குள் யாழ். மாவட்டத்திலிருந்து இதுவரையில் 36,800 பேர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அதில் 1,149 பேருக்கு இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் ஓய்வூதிய புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், வயோதிபர்கள், தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்த ஓய்வூதியம் நிச்சயமாக உதவுமென நம்புகின்றதாகவும்’ அவர் குறிப்பிட்டார்.

‘ஒருவரில் தங்கி வாழும் போது, எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பெரிதும் சிரமப்பட வேண்டியிருப்பதால், இந்த ஓய்வுதியத்தின் மூலம் வயோதிபர்கள் மற்றவர்களில் தங்கி வாழாது தமது தேவைகளை உடனடியாக நிறைவேற்றிக்கொள்ள முடியுமென எதிர்பார்ப்பதாகவும்’ அவர் மேலும் கூறினார்.

Related Posts