Ad Widget

ஒருநாள் போட்டியிலிருந்து விடைபெற்றார் டில்ஷான்: எழுந்து நின்று மரியாதை செலுத்திய ரசிகர்கள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 42 ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர் திலகரத்னே டில்ஷான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.

இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான டில்ஷான் தம்புல்லாவில் நடக்கும் 3வது ஒருநாள் போட்டியோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறப் போவதாக தெரிவித்திருந்தார்.

இதன்படி நேற்று களமிறங்கிய டில்ஷான் தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழந்ததும் அவுஸ்திரேலிய வீரர்கள் கைக்கொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

துணைத்தலைவர் சந்திமால் நீண்ட தூரம் டில்ஷானுடன் நடந்து வந்து அவரை வழியனுப்பினார். ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்கு பிரியா விடையளித்தனர்.

இலங்கை அணிக்காக 329 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டில்ஷான், 22 சதங்கள், 47 அரைசதங்களுடன் 11,868 ஓட்டங்கள் குவித்துள்ளார். பந்து வீச்சில் 106 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

Sri Lankan cricketer Tillakaratne Dilshan, center, is greeted with an arch of bats as he enters the field for the last match of his ODI cricket career during the third one day international cricket match against Australia in Dambulla, Sri Lanka, Sunday, Aug. 28, 2016. (AP Photo/Eranga Jayawardena)

Tillakaratne Dilshan -3

Tillakaratne Dilshan -1

Sri Lankan cricketer Tillakaratne Dilshan (C) receives a farewell from the crowd after declaring his retirement from One Day International cricket during the third ODI match between Sri Lanka and Australia at the Rangiri Dambulla International Cricket stadium in Dambulla on August 28, 2016.  Australia chased down 227 in 46 overs to deny Sri Lankan batsman Tillakaratne Dilshan a winning farewell in his final ODI. / AFP / ISHARA S.KODIKARA        (Photo credit should read ISHARA S.KODIKARA/AFP/Getty Images)

Related Posts