Ad Widget

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பெருமையுடன் வழங்கும் மலைத்தென்றல் – 2015!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பெருமையுடன் நடாத்தும் தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களையும் சிறப்புக்களையும் வெளிக்காட்டும் மலைத் தென்றல் நிகழ்வு இவ் வருடமும் மிகவும் பிரமாண்டமான முறையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (30.05.2015) பிற்பகல் 01.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலை கலாசாரப் பீடாதிபதி பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும் கௌரவ விருந்தினராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி ஜி.சந்திரசேன அவர்களும் சிறப்பு விருந்தினராக மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்தந்தை தமிழ்நேசன் அடிகளார் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மலைத்தென்றல் நிகழ்வின் சிறப்பு அம்சங்களாக பரதநாட்டிய நிகழ்வு, இசை நிகழ்ச்சி, சரித்திர நாடகம், தமிழ் ஆடல் மரபுகள், மற்றும் மலைத்தென்றல் நிகழ்வை பிரதிபலிக்கும் புத்தக வெளியீடும் நடைபெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை வெளிக்காட்டும் இவ் மலைத்தென்றல் நிகழ்விற்கு அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

IMG_1202

IMG_1203

IMG_1204

Related Posts