Ad Widget

உலக நீரிழிவு தினம் இன்று!

உலக நீரிழிவு தினம் இன்று (நவம்பர் 14ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படுகிறது.. இத்தினத்தை முன்னிட்டு இம்முறை பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடாகி உள்ளன.

diabetic-day

“நீரிழிவைத் தவிர்க்கலாம் அதற்குச் சகலரும் ஒன்றுசேர வேண்டும்” என்பதே இவ்வருட உலக நீரிழிவு தின தொனிப் பொருளாகும்.

இத்தினம் .நீரிழிவு நோய் பற்றி அறிவூட்டல், வளமான சுகாதார வாழ்வை மேற் கொள்ளல்,பாதயாத்திரை, செயலமர்வுகள் நாளை 15ஆம் திகதி நடத்தப்படுமென கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ஹோமோன்கள் தொடர்பான விசேட மருத்துவருமான டொக்டர் பிரசாத் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கான நாளைய அமைப்பு இலங்கை வாலிபர் அமைப்பு, கொழும்பு விஞ்ஞான பீட நீரிழிவு ஆராய்ச்சிப் பிரிவு, தேசிய போஷாக்கு அதிகார சபை. சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து இதனை மேற்கொள்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள பாதயாத்திரை சுதந்திர சதுக்கத்திலிருந்து 15ஆம் திகதி காலை 06 மணிக்கு ஆரம்பமாகும்.

Related Posts