Ad Widget

உறுப்பினர்களது உரிமைகளையே புறந்தள்ளுகிறது வடக்குமாகாண சபை! அனந்தி குற்றச்சாட்டு

முள்ளிவாய்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாம் மாகாண சபைக்கு சென்ற வேளை பொலிஸாரும், இராணுவத்தினரும் எம்மை அவமரியாதைப்படுத்திய விடயம் சம்பந்தமாக வட மாகாண சபையின் அவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தும் அதற்கு அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. – இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.

ananthi

யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

இறுதிப்போரில் மாண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்ற வேளை கைதடி பேரவைச் செயலகத்துக்கு முன் நாம் அவமரியாதைக்குட்படுத்தப்பட்டோம். இதுகுறித்து வடக்கு மாகாண சபையின் 26 உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு பேரவைத் தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தோம். இதற்கு எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை. கடிதம் அனுப்பி நான்கு மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை பதில் தரப்படாமையானது உறுப்பினர்களது கோரிக்கையைப் புறந்தள்ளும் செயற்பாடு மட்டுமன்றி எமது அடிப்படை உரிமையை மீறும் செயலாகவுமே கருதுகிறோம்.எனவே உரிய பதிலை எழுத்து மூலம் எதிர்பார்த்திருக்கிறோம். என்றார்.

தொடர்புடைய செய்தி

புலனாய்வாளர்கள் இடையூறு – அனந்தி

Related Posts