Ad Widget

உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆலய உற்சவத்தை நடத்த இராணுவம் அனுமதி

udaya pereraவலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள வசாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழா உற்சவத்தினை நடத்துவதற்கு யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயப் பெரேரா அனுமதியளித்துள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் இன்று தெரிவித்தது.

அதற்கமைய, மேற்படி ஆலயத்தில் நூற்றாண்டு விழா உற்சவம் எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த உற்சவத்தை, யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்கள் நடத்திவைக்கவுள்ளார்.

வசாவிளான் பகுதிகளில் இருந்து, இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் வாழும் பொதுமக்களின் நலன்கருதி, யாழ்ப்பாணம் புனித சார்ள்ஸ் மகா வித்தியாலயம் பருத்தித்துறை புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் கோப்பாய் புனித மரியாள் ஆலயம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related Posts