Ad Widget

இளைஞர் மீது இராணுவச்சிப்பாய் தாக்க முயற்சி

boys-fight-cartoonயாழ் கோட்டை கடற்கரைப் பூங்காவில் பொழுதை கழிப்பதற்காக வந்திருந்த இளைஞர் மீது இராணுவச்சிப்பாய் ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சனிக்கிழமை மாலை 5.45 மணியளவில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதிக்கு பொழுது போக்கை கழிப்பதற்காக வருகை தந்த இரு இளைஞர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளை கடற்கரைப் பூங்கா பகுதியில் நிறுத்தி விட்டு அங்குள்ள இருக்கையில் அமர்ந்திருந்துள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் வந்த இராணுவச்சிப்பாய் ஒருவர் இருவரின் மோட்டார் சைக்கிள்களில் இருந்த தலைக்கவசங்களையும் எடுத்துச் சென்றுள்ளார்.

இதனை அவதானித்த இளைஞன் குறித்த தலைக்கசவங்கள் தங்களுடையது என்று தெரிவித்தபோதிலும் அதனை கொடுப்பதற்கு இராணுவச்சிப்பாய் மறுத்துள்ளார். வாகனம் நிறுத்துவதற்கு தடைச்செய்யப்பட்ட இடத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ளதால் தலைக்கவசத்தை தரமுடியாது என்று கூறியதுடன் இளைஞரைத் தாக்கவும் முற்பட்டுள்ளார்.

இருவருக்கிடையிலும் வாக்குவாதம் எற்பட்டதையடுத்து அப்பகுதயில் பகுதியில் பெருமளவான மக்கள் கூடிவிட்டனர். இதனை அவதானித்த படைச்சிப்பாய் தலைக்கவசத்தை கொடுத்து விட்டு அருக்கில் உள்ள இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளார்.

இச்சம்பவத்தினால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் இதனை அடுத்து அங்கு பொழுது போக்ககை கழிப்பதற்கு வருகை தந்தவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

குறித்த கடற்கரைப் பூங்கா பகுதி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.
இதன் பராமரிப்பு பணி யாழ். மாநகர சபையிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வாகனங்களை நிறுத்துவதற்கான வாகனத்தரிப்பிடம் இதுவரை அமைக்கப்படாத காரணத்தினால் கடற்கரைப் பூங்காவினை அண்டிய பகுதியிலேயே வாகனங்கள் நிறுத்தப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர்.

Related Posts