Ad Widget

இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் பாரம்பரிய விளையாட்டுபோட்டி

தைபொங்கல் திருநாளை முன்னிட்டு இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் பாரம்பரிய விளையாட்டுபோட்டி நடத்தபட்டது.இதில் வடமாகாணரீதியாக இடம் பெற்ற கபடிபோட்டியில் ஆண்கள்பிரிவில் “மன்னார் என்றும் பசுமை அணி” முதலிடத்தை தட்டிசென்று 10000/= பணபரிசை வென்றது.

1

2ம் இடத்தை கிளிநொச்சி உழவர் ஒன்றியம் பெற்று 5000/= பணபரிசை பெற்றது.

பெண்கள் பிரிவில் இளவாலை இளம் சுடர் அணி முதலாமிடத்தையும், சாவகச்சே ரிட்ரிபேடிக் அணி 2ம் இடத்தையும் பெற்று கொண்டன.

தொடர்ந்து மரதன் ஓட்டபோட்டி இடம்பெற்றது இதில் இளவாலையைச் சேர்ந்த செல்வன்.தமிழ்செல்வன் முதல் இடத்தைப் பெற்று 5000/= ரூபா பணபரிசை வென்றார்.

2ம் 3ம்இடங்களுக்கு முறையே 3000ரூபா, 2000ரூபாபணபரிசும் வழங்கபட்டது.

6

பொங்கல் தினத்தன்று மிகபிரமாண்டமாக பட்டம் ஏற்றல் போட்டிகளும் நடைபெற்றன. இதில் நூற்றுகணக்கான பார்வையாளர்கள் வருகைதந்தனர்.

இதில் முதல் ஆறு இடங்களை பெற்றவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பணபரிசில்கள் வழங்கபட்டன.
தொடர்ந்து மாலை சறுக்குமரம் ஏறல், தயிர்முட்டி உடைத்தல், தலைகனை சண்டை, கயிறுழுத்தல், மற்றும் பாலர் பிரிவுபோட்டிகளும் இடம்பெற்றன.

12

மாலை பொங்கல் விழா இடம்பெற்றது. பொங்கல் விழாவுக்கு பிரதமவிருந்தினராக திரு.எஸ்.எஸ்.குகநாதன் (நிர்வாகஇயக்குனர் DAN TV) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.எஸ்.சுதர்யன் (ஊர்காவற்துறை பிரதேசசபை செயலாளர்) அவர்களும் கௌரவ விருந்தினர்களாக டாக்டர்.க.சசிகேஷ் (சிரேஸ்ட விரிவுரையாளர் யாழ் பல்கலை )அவர்களும் திருமதி.தாட்சாயினி செல்வகுமார் (கலசார உத்தியோகத்தர் தெல்லிபளை அவர்களும் மற்றும் செல்வி.ப.மரின்பெனிற்றா (இளவாலை வடக்கு கிராம சேவையாளர் ) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ் கலசார பண்பாடுகளுடனான இவ்விழாவில் மேளதாளங்கள் குதிரையாட்டம் சகிதம் விருந்தினர் வரவேற்ப்பு என எங்கள் பாரம்பரியங்களை பறைசாற்றும் எராளமானவிடயங்கள் உள்ளடக்கபட்டிருந்தன. மேலும் வாலிபர்களின் இசை நிகழ்வுகள்,சகோதர கழகங்களின் கலை நிகழ்வுகள், நாடகங்கள், முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகள் என எராளமான நிகழ்வுகள் இடம்பெற்றன.

7

8

9

10

14

15

Related Posts