Ad Widget

இலங்கை ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் எஞ்சலோ மெதிவ்ஸ்

இலங்கை அணி, இங்கிலாந்து அணியுடனான தொடரில் இதுவரை வெற்றிபெற முடியாமல் உள்ளமைக்கு அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததுடன், ஒரு நாள் தொடரிலும் 3க்கு 0 கணக்கில் இலங்கை அணி தோல்வியடைந்தது.

இதனால் இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ், இலங்கை ரசிகர்களிடம் தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக இந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

angelow

எங்களது விளையாட்டு பாணியினால் ஒரு சிலர் அணியை வெறுத்துள்ளனர்.

எனினும் இலங்கை அணி மீது அன்பு கொண்டவர்களும் உள்ளனர்.

உங்களை தாழ்த்துவது தொடர்பாக வருந்துகிறேன்

என்று  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி சதம்ப்ரன் இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரை இழந்துள்ள நிலையில், இலங்கைக்கு இந்த போட்டி முக்கியமானதாக அமைகிறது.

இன்றைய போட்டியில், இங்கிலாந்து சார்பாக, ஹம்ப்ஷெயார் பிராந்திய அணியின் சகலதுறை வீரர் லியாம் டவுன்சன் தமது முதலாவது சர்வதேச 20க்கு20 போட்டியில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட் மற்றும் மொயின் அலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியை பொறுத்தவரையில், தனஞ்சய டி சில்வாவுக்கு பதிலாக உப்புல் தரங்க இணைத்துக் கொள்ளப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சுராஜ் ரந்தீவும் இணைத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டி நடைபெறவுள்ள மைதானம் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டுக்கும் சிறந்த வாய்ப்பளிப்பதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts